'ஜெயிலர் 2' படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் நெல்சன்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் உலகமெங்கும் வெளியாகி ரூ. 650 கோடிக்கும் மேல் வசூலித்து  மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. 

இந்த படத்தில், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் "ஜெயிலர்" திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் என தகவல் வந்த நிலையில், இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதன்படி, இயக்குனர் நெல்சன்  'ஜெயிலர் 2' திரைப்படத்தை குறித்து புதிய அப்டேட்டை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, நெல்சன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரிடம் 'ஜெயிலர் 2' அப்டேட்டை ரசிகர்கள் கேக்கும்போது அப்போது அவர் கூறியதாவது,  'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குனர் நெல்சன் 'ஜெயிலர் 2' இப்படத்தின் மூலம் சூப்பர்ஸ்டாருடன் மீண்டும் இணைய உள்ளார்.

தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடித்து முடித்து விட்டார். அக் 10 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது. மேலும், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் 'கூலி' என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Nelson gave an update on 'Jailer 2'


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->