உலகளவில் வசூல்வேட்டை நடத்தும் மார்கோ; உன்னிமுகுந்தன் மாஸ் சம்பவம்..!
Margo is a worldwide collection hunter
மார்கோ திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்க ஹனீப் அடேனி என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த 20ஆம் தேதி மார்கோ திரைக்கு வந்தது.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இந்த நிலையில், அதன்படி, உலகளவில் 10 நாட்களில் இப்படம் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மலையாள திரையுலகில் இருந்து பல யர்த்தார்த்தமான திரைப்படங்களை பார்க்க முடியும். ஆனால், முழுமையான கமர்ஷியல் அம்சத்தில், ரத்தம் தெறிக்க தெறிக்க உருவான ஒரு திரைப்படமாக இந்த மார்கோ திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை செய்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Margo is a worldwide collection hunter