புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை மெரினாவில் போக்குவரத்துக்கு தடை..! - Seithipunal
Seithipunal


இன்று இரவு புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னை மெரினா காமராஜர் சாலையில் பொதுமக்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் கடற்கரை உட்புற சாலை இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும் என்றும், காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை 6 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். 

இதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையிலும் போக்குவரத்துக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை வழியாகவும், பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவும் மாற்றுப்பாதையில் செல்லலாம். 

வாலாஜா சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து வடக்கு நோக்கி வரும் மாநகர பேருந்துகள் ஆர்.கே. மடம் சாலையில் யூ டர்ன் அடித்து செல்லலாம். 

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் மாநகர பேருந்துகள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் வடபகுதி நோக்கி திருப்பி விடப்படும். சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்றிரவு 10 மணி முதல் 1-ந்தேதி அன்று 6 மணி வரை மூடப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

traffic prohibited in merina for new year celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->