பிரபல நடிகர் திலீப் சங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை..!
Famous actor Dileep Shankar dies in hotel room
பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த செய்தி மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
எர்ணாகுளத்தை சேர்ந்தவர் திலீப் சங்கர். பல பிரபலமான மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். 'அம்மா இறைத்தே', 'பஞ்சாக்னி', 'சுந்தரி' போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே கேரளாவில் உள்ளது. இதைத்தவிர சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் திலீப் சங்கர் நடித்துள்ளார்.
தற்போது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் "பஞ்சாக்னி" என்ற சீரியலின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக திலீப் சங்கர் எர்ணாகுளத்தில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
ஆனால், ஷூட்டிங் இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மறுபடியும் எர்ணாகுளம் திரும்பி வராமல், திலீப் சங்கர்4 நாள் முன்பு, திருவனந்தபுரம் வான்ராஸ் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.
அறை எடுத்த பிறகு, கடந்த 2 நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு அவரை தொடர்பு கொண்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஹோட்டல் தரப்பில் அவர்கள் விசாரித்துள்ளனர். இதன் போதே திலீப் சங்கர் இரண்டு நாட்களாக ரூமை விட்டு வெளியே வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதனால், அவரது அறைக்குள் சென்று ஓட்டல் ஊழியர்கள் பார்த்துள்ளனர்.. கதவை திறந்ததுமே, ஊழியர்கள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அறைக்குள் நுழைந்ததுமே துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அவர் இறந்து பல மணி நேரங்கள் ஆகி ஆகியிருக்கலாம் என்று ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திலீப் சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கான காரணத்தை போலீஸ் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்" என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவர் கடைசியாக ''பஞ்சாக்னி'' சீரியலில் சந்திரசேனன் கேரக்டரிலும், சமீபத்தில் அம்மையாரேயில் பீட்டராக நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தார். இவரின் மரணம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Famous actor Dileep Shankar dies in hotel room