புகைப்படத்துடன் கமலுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ஷங்கர்.! - Seithipunal
Seithipunal


ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன்-2'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், மறைந்த பிரபல நடிகர் விவேக் என்று ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டது.

இந்த படப்பிடிப்பில், கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷங்கரும், மற்ற கதாபாத்திரங்களின் படப்பிடிப்பை 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன் மற்றும் வசந்தபாலன் உள்ளிட்டோர் இயக்கினர். 

இந்த நிலையில் தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதன் படி, இயக்குனர் சங்கர் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், நமது உலகநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சேனாபதியை மீண்டும் திரைக்கு அழைத்து வர உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை! நீங்கள் தொடர்ந்து எங்களை மகிழ்விப்பீர்கள், மேலும் லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director shangar birthday wish to actor kamal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->