ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - தொகுதியை தட்டி தூக்க போவது யார்?
erode vote counting start
கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் 'சீல்' உடைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் அடங்கிய மூன்று பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
ஒவ்வொரு பெட்டியாக சீல் உடைக்கப்பட்டும் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தபால் ஒட்டு எண்ணிக்கையில் திமுக முன்னணியில் உள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
English Summary
erode vote counting start