நாடு தழுவிய போராட்டம் - வங்கி ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு.!
bank employees protest in india coming 24 and 25
நாட்டில் வங்கி ஊழியர்கள் வங்கித்துறையில் அனைத்து நிலைகளிலும் போதுமான பணியாளர்களை நியமித்தல், வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, செயல்பாடு ஆய்வு மற்றும் செயல்பாடு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை திரும்பப்பெற ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதேப்போல இந்திய வங்கிகள் சங்கத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பிரச்சனைகளைத் தீர்க்கவும், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தின்படி, வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதோடு, பணிக்கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்தவும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக இந்த மாதம் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. இருப்பினும் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தேதியை மாற்றி அமைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
bank employees protest in india coming 24 and 25