தென்னிந்தியாவின் மிக பணக்கார நடிகர் யார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal



தென்னிந்தியாவின் மிக பணக்கார நடிகர் பட்டியலில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், பிரபாஸ் உட்பட அனைவரையும் முந்திச் சென்றுள்ளார் ஒரு நடிகர். தென்னிந்தியாவின் மிக முக்கிய, அனைவராலும் விரும்பப் படும் ஒரு நடிகராக இருப்பவர். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிக முக்கிய இடத்தில் இருப்பவர். 

அவர் தான் அக்கினேனி நாகர்ஜூனா. தெலுங்கு சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் அக்கினேனி நாகார்ஜூனா, படங்களில் நடிப்பதோடு அல்லாமல், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். 

சமீபத்திய லைஃப்ஸ்டைல் ஆசியா ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, நாகர்ஜூனாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 3,010 கோடி என்று தெரிய வந்துள்ளது. இவருக்கு ஹைதராபாத் மற்றும் மும்பையில் தலா ரூ. 42.3 கோடி மதிப்பில் பல குடியிருப்புகள் உள்ளன. 

மேலும் இவரது அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மூலம் திரைப்படத் தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 50 கோடி மதிப்புள்ள குடியிருப்பு, ரூ. 1.50 கோடி மதிப்பில் பிஎம் டபிள்யு சீரிஸ் 7 கார், ரூ. 90.5 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ 7 மற்றும் ரூ. 1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யு எம்6, மேலும் ரூ. 2 கோடி மதிப்புள்ள போர்ஷே கெயின் மற்றும் பல்வேறு உயர் ரக கார்களை கொண்டுள்ளார். 

இந்த சொத்துப் பட்டியலின் மூலம் தென்னிந்திய நடிகர்கள் பிரபாஸ், ராம் சரண், ரஜினிகாந்த் ஆகியோரை முந்திச் சென்று தென்னிந்தியாவின் பணக்கார நடிகராக முதலிடத்தைப் பிடித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do You Know Who is South Indias Most Richest Actor


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->