லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் : டி.எல்.எஸ் முறையில் ஐதராபாத் அணி வெற்றி! - Seithipunal
Seithipunal


லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்ற
முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த தொடரில் இந்தியா கேப்பிடல்ஸ், மணிபால் டைகர்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த தொடரின் 3வது சீசன் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது.

இந்த தொடரில், ஜம்முவில்  நேற்று நடைபெற்ற லீக் போட்டியில்,  டோயம் ஐதராபாத்-சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சதர்ச் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 14 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்ததால்  டி.எல்.எஸ் முறையில் வெற்றி பெற்ற அணி எது என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், டி.எல்.எஸ் முறையில் 5 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐதராபாத் தரப்பில் பிபுல் சர்மா, சிவகாந்த் சுக்லா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐதராபாத் தரப்பில் வால்டன் 40 ரன் எடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Legends league cricket hyderabad team wins in dls mode


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->