வானில் வர்ணாஜாலமிட்ட சென்னை விமான சாகச நிகழ்ச்சி!...லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில்  முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினம் வரும் 8-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில்,  கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தலைமை ஏர் மார்ஷல் ஏ.பி.சிங், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் கண்டு களித்தனர்.
 
மேலும் மெரினா கடற்கரையில் கடல் அலையை விட மிஞ்சும் அளவிற்கு பொது மக்கள்  நீண்ட வரிசையில் குடை பிடித்து காத்திருந்து, வானில் நிகழ்ந்த சாகச நிகழ்ச்சிகளை ரசித்தனர்.


இந்த விமான சாகசத்தில் ரபேல், தேஜஸ், சூகோய் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்றன. அதுமட்டுமல்லாமல் ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்தினர்.

முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து எம்.ஐ.,17 ஹெ லிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சுகோய்-30 எம்.கே.ஐ., ரபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போன்ற போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது.

சேத்தக் ஹெலிகாப்டர்கள் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட்டப்படி வானை அதிர வைத்த நிலையில், தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தது. அதுமட்டுமல்லாமல் இடிமுழுக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

ஒட்டு மொத்தமாக சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டு களித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A colorful chennai flight adventure show in the sky achievement in the limca book of records


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->