பரபரப்பு!...ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரைப்படத்தில் புட்ட பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்ற நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறந்த நடன இயக்குநராக  அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

இதற்கிடையே, ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர் தனது 16 வயதில் ஜானி மாஸ்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில், போலீசார் ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

சமீபத்தில் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா, எனது கணவர் ஜானி மாஸ்டரும், அந்த பெண்ணும் பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்


தொடர்ந்து, தலைமறைவான ஜானி மாஸ்டரை பெங்களூருவில் கைது செய்த போலீசார், அவரை ஐதராபாத் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது வழங்கப்பட இருந்த நிலையில்,  விழாவில் பங்கேற்பதற்காக நடன இயக்குனர் ஜானிக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியாது.  இந்த நிலையில், திடீரென ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panic johnny master national award cancelled


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->