இந்தியா என்பது அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ராஜஸ்தானின் பரான் நகரில் நடைபெற்ற சுயம்சேவக் நிகழ்ச்சியில் பேசினார். அவர் தனது உரையில் இந்தியா அல்லது பாரத் பழமையான கலாச்சார அடிப்படையில் இந்து ராஷ்டிரம் என்பதை வலியுறுத்தினார்.

பகவத் கூறியதாவது, இந்துக்கள் அனைவரையும் அரவணைத்தவர்கள், பாகுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழ்வது தான் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை. சாதி, மதம், மொழி போன்ற பாகுபாடுகளைப் புறக்கணித்து, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.

மற்றொரு முக்கியமான கருத்தாக, கடவுளிடம் முழுமையாக எதிர்பார்த்து விடாமல், தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் தாமே முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

இது மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு தேர் ஓட்டியதற்கான எடுத்துக்காட்டை அடிப்படையாகக் கொண்டது. பாண்டவர்கள் தயாராக இருந்தபின் தான் கிருஷ்ணர் அவர்களுக்குத் தேர் ஓட்டினார், ஆனால் அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தாமே முன்வந்தனர் என்றார்.

பாரத மாதாவைக் காக்க அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்பது நமது கலாச்சாரம், பாரம்பரியம் என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India is basically a Hindu Rashtra RSS chief Mohan Bhagwat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->