பதற்றத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் - காரணம் என்ன?
double eviction of bigg boss season 7
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் இல்லத்தில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பூகம்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்குகளில் போட்டியாளர்கள் தோற்றால், அதற்குப் பதிலாக ஏற்கெனவே பிக் பாஸ்7 இல்லத்தை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள்.
அவர்களுக்குப் பதில் இந்த டாஸ்கில் தோற்ற போட்டியாளர்கள் வெளியேற வேண்டும். மேலும், வெளியேறும் போட்டியாளர்களின் எண்ணிக்கையும் மாறுபடும் என்று பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி, நடைபெற்ற கடினமான மூன்று டாஸ்குகளில் ஒரு டாஸ்க்கில் மட்டுமே போட்டியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/Bigg Boss a.PNG)
மற்ற இரண்டில் தோல்வி அடைந்ததால், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இவர்களுக்குப் பதிலாக வெளியேறிய போட்டியாளர்களில் இருவர் யார் வரப்போகிறார்கள் என்பது இந்த வாரம் தெரிய வரும்.
மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என்பதால், குறைந்த வாக்குகள் பெற்ற மாயா, பூர்ணிமா ஆகிய இருவரில் ஒருவர் எவிக்ட் ஆவது உறுதி. இதன் முடிவு என்பது இந்த வாரத்தில் தெரிந்துவிடும்.
English Summary
double eviction of bigg boss season 7