90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரைட் ஹீரோயின்களை ஒரே படத்தில் களமிறக்கும் திரில்லர் இயக்குனர்! - Seithipunal
Seithipunal


90 களின் இறுதியில் இருந்து  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்கள்  நடிகை சிம்ரன் மற்றும் லைலா. இவர்கள் இருவரும் தற்போது 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஈரம்' இந்த திரைப்படத்தில்  ஆதி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை இயக்கியவர் அறிவழகன் வெங்கடாசலம். தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு திரில்லர் திரைப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இந்த முறை  டைரக்டர் அறிவழகன் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

சப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை அறிவழகன் இயக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் ஆதி கதாநாயகனாகவும் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகி நடிக்க இருக்கின்றனர். ஈரம் படத்திற்கு இசையமைத்த தமன் இந்தத் திரைப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த லைலா  இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார். மேலும் அவருடன் சிம்ரன் நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பார்த்தேன் ரசித்தேன் மற்றும் பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு சிம்ரனும் லைலாவும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்கயிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eeram fame director arivalangan new project simran and layla going to act together


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->