என்னை மன்னிச்சிடுங்க!...நடிகர் சசிகுமார் பிறந்தநாளில் இப்படி ஒரு பதிவா?...அந்த இயக்குனர் செய்த செயல் இதோ! - Seithipunal
Seithipunal


சசிகுமார் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக கலைஞர் ஆவார். ஆரம்பகாலத்தில் இவர் இயக்குனர் பாலா மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு இயக்குனராக சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கியும், தயாரிப்பாளராக சுப்ரமணியபுரம், பசங்க போன்ற திரைப்படங்களை தயாரித்தும் வெள்ளிதிரையில் தடம் பதித்தார்.

இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த, 'நந்தன்' திரைப்படம் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை 'உடன்பிறப்பே' படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கிய நிலையில், இந்த படத்தில்  ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று நடிகர் சசிகுமார் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், நந்தன் பட இயக்குனர் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரின் சமூக வலைத்தள பக்கத்தில், வேற யாரும் இந்த படத்தை  பண்ண முடியாது என்றும், என்ன மன்னிச்சிடுங்க சசிகுமார் சார் என்று இயக்குனர் ரா.சரவணன் தெரிவித்துள்ளார்.  தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Excuse me A post like this on actor Sasikumar birthday Here what the director did


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->