யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம்..தமிழகத்தை தொடர்ந்து கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!
Resolution against UGC norms Kerala Assembly passes bill in Tamil Nadu
மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழுவின் ( யு.ஜி.சி.) புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாட்டைத் தொடர்ந்து யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை போன்று, 9 மாநில சட்டமன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென கோரி அம்மாநில முதல்-மந்திரிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.20) கடிதம் எழுதி இருந்தார்.
மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழுவின் யு.ஜி.சி. விதிகளை திரும்பப் பெற கோரி இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி இருந்தார். அதில் தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை போன்று, 9 மாநில சட்டமன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென கோரியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழுவின் ( யு.ஜி.சி.) புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் என்றும் இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம். எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதல்-மந்திரிகளும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Resolution against UGC norms Kerala Assembly passes bill in Tamil Nadu