வருகிற 5-ந்தேதி அரசு விடுமுறை அறிவிப்பு.. அரசாணை வெளியீடு!
Government declares holiday on 5th Government Order Issued
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இடைத்தேர்தலில் முழு அளவிலான வாக்கு சதவீதத்தை வலியுறுத்தும் வகையில் அரசு விடுமுறை அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சினர் அந்த தொகுதியில் முகாமிட்டுள்ளனர். தற்போது தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து மனு மீதான பரிசீலனையும் முடிந்துள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலில் மொத்தம் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதி என்பவரின் மனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47ல் இருந்து 46ஆக குறைந்துள்ளது.
இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி களைகட்ட துவங்கியுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இடைத்தேர்தலில் முழு அளவிலான வாக்கு சதவீதத்தை வலியுறுத்தும் வகையில் அரசு விடுமுறை அளித்துள்ளது.
English Summary
Government declares holiday on 5th Government Order Issued