மருத்துவ மேதை' திரு.பெலிக்ஸ் ஹாஃப்மேன் அவர்கள் பிறந்ததினம்! - Seithipunal
Seithipunal


மருத்துவத்தில் சாதனைபுரிந்த மருத்துவ மேதை' திரு.பெலிக்ஸ் ஹாஃப்மேன் அவர்கள் பிறந்ததினம் இன்று !.

மருத்துவ மேதை பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1868ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

 சிறுவனாக இருந்த சமயத்தில் இவருடைய தந்தை மூட்டுவலியால் அவதிப்பட்டதை பார்த்து, அதற்கான ஆஸ்பிரின்(Aspirin) மருந்தை 1897ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இதன் வேதியியல் பெயர் அசிடைல்சாலிசிலிக் (Acetylsalicylic) ஆசிட் ஆகும்.

 முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட ஆஸ்பிரின் மருந்து, பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கும் முறை மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையில் விற்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிவேகமாக இது பிரபலமடைந்தது.

இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிகளவு விற்பனையான மருந்து ஆஸ்பிரின் ஆகும். ஆஸ்பிரின் மருந்து பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாக பயன்படுகிறது.இப்படி மருத்துவத்தில் சாதனைபுரிந்த மருத்துவ மேதை' திரு.பெலிக்ஸ் ஹாஃப்மேன் அவர்கள் பிறந்ததினம் இன்று !.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Birthday of the medical genius Mr Felix Hoffman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->