கோயம்புத்தூர் || அடுத்தடுத்து சரிந்து விழுந்த வீடுகள் - உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் சிவானந்தா காலனி அருகே ஹட்கோ காலனிக்கு பின்புறம் சங்கனூர் ஒடை அருகே 70-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சங்கனூர் ஓடையை தூர்வாரி கரைப்பகுதியை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

அதன் படி ஓடையில் இருந்து மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், ஓடையின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சங்கனூர் ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான மாடி வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்பகுதியை கடந்த 10 நாட்களுக்கு முன்பு 10 அடி தூரம் வரை இடித்து அகற்றி தர வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்பட்டது. பின்புற வீட்டை அகற்றியதால் சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் திடீரென அதிர்வு ஏற்பட்டு, வீடு சரிந்து கீழே விழுவது போல அசைந்து கொண்டு இருந்தது.

இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீட்டில் ஏற்பட்ட அதிர்வு அருகே உள்ள வீட்டிலும் காணப்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் சுரேஷின் வீடு முழுவதுமாக சரிந்து கீழே விழுந்தது. அருகே இருந்த 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படாவிட்டாலும் வீட்டிற்குள் இருந்த டி.வி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

house collapse in coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->