அடுத்த சோகம்.! பிரபல நடன இயக்குனர் சம்பத்ராஜ் திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடன இயக்குனர் சம்பத்ராஜ் மரணமடைந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பத்ராஜுக்கு தற்பொழுது 54 வயதாகும் நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

நடிகர் அஜித்தின் முதல் படமான அமராவதி, மற்றும் மிகப்பெரிய ஹிட்டான காதல் கோட்டை போன்ற படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்த நிலையில் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

சிறுநீரக பிரச்சனை தொடர்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் சகோதரர் ஹரிஷ் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous choreographer Sambhatraj died suddenly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->