தல பிறந்த நாளை முன்னிட்டு... போனி கபூர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு... உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார்.  தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கோடகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புதிய படத்திற்கான தலைப்பும் இன்று வெளியிடப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவரது நடிப்பில் உருவான துணிவு என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. வினோத் இயக்கத்தில்  மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து அஜித்குமாரின் ஏகே 62 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில்  லைக்கா தயாரிப்பு நிறுவனம் அஜித் குமாரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது புதிய படத்திற்கான டைட்டிலை இன்று வெளியிட்டது. அஜித் குமார் நடிக்கும் 62 வது திரைப்படத்தின் டைட்டில் விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பிற்கு அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அதற்கு மேலும் சிறப்பு செய்யும் வகையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்  தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிவிப்பின்படி துணிவு படத்தில் வெளியான கேங்ஸ்டர் என்ற பாடலானது  இன்று மாலை 5:30 மணிக்கு மீண்டும் வெளியிடப்படும் என  தெரிவித்திருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fans are excited about Boney Kapoor action announcement on the occasion of Thala birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->