ரசிகர்கள் மிஸ் பண்ண எல்சியூ: லோகேஷ் கனகராஜ் விளக்கம்!  - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று முதல் வாரத்தில் மட்டும் ரூ. 461 கோடி வசூலித்ததாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. 

சென்னையில் படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

இந்த திரைப்படம் எல்சியூயில் இருப்பது படம் பார்த்தவர்களுக்கு தெரியும் ஆனால் எல்சியூ தொடர்புகள் சரியாக அமையவில்லை என பல்வேறு விமர்சனங்கள் இருந்தன.

மேலும் ரசிகர்கள் மரியம் ஜார்ஜ், கமல் வாய்ஸ் ஓவர் போன்றவை சரியாக பொருந்தவில்லை என தெரிவித்தனர். லியோ எல்சியூ என்பதை படம் பார்த்தவர்கள் தெரிந்து கொண்டாலும் நுணுக்கமான தகவல்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அதில் 'விக்ரம் திரைப்படத்தில் வரும் அமரும் லியோ சத்தியமங்கலத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் வளர்ந்தவர்கள். இதுபோல் சிறு சிறு நுணுக்கமான விஷயங்களை ரசிகர்கள் கண்டுபிடித்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்' என தெரிவித்துள்ளார். 

இதுபோன்று எல்சியூ வில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fans miss LCU Lokesh Kanagaraj explains


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->