நோட் பண்ணுங்க மக்களே! பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க சரியான நேரம் இதுதான்!  - Seithipunal
Seithipunal



தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களின் வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி கொண்டாடி மகிழ உள்ளனர். 

பொங்கல் வைக்க உகந்த நேரம்:

காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பொங்கல் வைக்கலாம், 
ஆனால். சூரியன் மகர ராசிக்கு பகல் 11.58 மணிக்கு மேல் பிரவேசிக்கிறார். அதனால், மகர சங்கராந்தி பொங்கல் அடிப்படையில், 
பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் பொங்கல் வைப்பது சிறந்த நேரமாகும். 
குரு ஓரையும் வருவதால், இந்த நேரம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாகும். 

மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம்:
 
மாட்டுப் பொங்கல் கொண்டாட அன்றைக்காய் தினம் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மாட்டுப் பொங்கல் வைத்தால் உகந்ததாகும். 

மாடுகளை குளிப்பாட்டி, அழகுபடுத்தி, கழுத்தில் பூமாலை மற்றும் கரும்பு மாலை அணிவித்து, பின்னர் பொங்கல் வைத்து வழிபடுங்கள். 

முக்கியமா மறக்காம பொங்கல் நைவேத்தியத்தை மாடுகளுக்கு அளித்துவிட்டு, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உண்ணுங்கள். அப்போதுதான் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thai Pongal mattu pongal vaikka nalla neram 2025


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->