ரூ.99-க்கு மதுபானங்கள்! போட்டிபோட்டு விலையை குறைத்த மதுபான நிறுவனங்கள்!
Andhra liquor price drop
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மது பிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க மதுபான விலைகள் குறைக்கப்பட்டு, மதுபாட்டில்கள் மீதான வரி ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக, மதுபான நிறுவனங்கள் விலையை குறைத்தன, தற்போது அம்மாநிலத்தில் ரூ.99-க்கு மதுபானங்கள் கிடைக்கின்றன.
அரசின் நடவடிக்கையால், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 16 மதுபான நிறுவனங்கள் தங்களது மதுபானங்களின் விலையை குறைக்க அரசு அனுமதி கோரியுள்ளன.
அரசு அனுமதி கிடைத்த 10 பிராண்டுகள் விலை குறைக்க, அதன் விற்பனை அதிகளவில் நடக்க தொடங்கியது. இதனை உணர்ந்த மற்ற நிறுவனங்களும் வியாபாரப் போட்டி கடுமையாக, தற்போது பல நிறுவனங்கள் விலையை குறைக்க முன்வந்து, வரி செலுத்தி கொண்டிருக்கின்றன.
மேலும், நாட்டிலேயே மதுபான விலை குறைக்க நிறுவங்கள் முதல்முறையாக போட்டி போட்டு அரசிடம் மனு அளிக்கும் நிகழ்வு ஆந்திராவில் தான் நடப்பதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.