வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் 'ஃபைட் கிளப்' படக்குழு: வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


 அப்பாஸ் ஏ ரஸ்மத் இயக்கத்தில் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஃபைட் கிளப்'. மேலும் இந்த திரைப்படத்தில் கார்த்திகேயன், சந்தானம், சங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையே விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் ரூ. 5 கோடி 75 லட்சத்திற்கு அதிகமாக வசூலித்துள்ளதாக பட குழு சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் 'ஃபைட் கிளப்' திரைப்படத்தின் வெற்றியை பட குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவில் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் என்ற நிறுவனம் மூலம் வெளியிட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fight club movie success celebration


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->