முதல் நாளிலேயே மிரளவிட்ட ராயன் படம் வசூல் - எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ், தன்னுடைய ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான நிலையில், ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

ஆக்சன் கதைக்களத்தில், வடசென்னை பின்னணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, தூஷரா விஜயன், பிரகாஷ்ராஜ், சரவணன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

தனுஷின் ரசிகர்கள் இந்த படத்தை நேற்று ஆரவாரத்தோடு வரவேற்ற நிலையில், இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்தப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து முதல் நாளே மிகப்பெரிய வசூலை ஈட்டி உள்ளது.

அதாவது, பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் ராயன் படம் வசூல் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி  ராயன் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 12.5 கோடி வசூல் செய்துள்ளது. 

அதாவது தமிழில் இந்தப்படம் 11 கோடியும் தெலுங்கில் 1.5 கோடியும் படம் வசூலித்துள்ளது.  தனுஷின் சினிமா வாழக்கையில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படமாக ராயன் படம் அமைந்துள்ளது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

first day raayan movie collection


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->