பொறுத்து பொறுத்து பார்த்து, இப்படி ஒரு நிலைக்கு ஆளான கேப்ரில்லா.! ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கேப்ரில்லா சார்ல்ட்டன் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர், ஜோடி நம்பர் ஒன் பார்ட் 6-இல் வெற்றி பெற்றார். ஒன்பது வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர், விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

இதன் மூலம் பிரபல தன்மையைப் பெற்ற கேப்ரில்லா விஜய் டிவியின் ஒன்பதாம் வகுப்பு c' பிரிவு சீரியலில் நடித்தார். தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக கடந்த 2012ம் ஆண்டில் நடித்திருப்பார். 

அதனைத் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா போன்ற திரைப்படங்களில் கேப்ரில்லா நடித்தார். கடந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அவர், பிக்பாஸ் வழங்கிய தொகையை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை போராடாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

இத்தகைய நிலையில், விஜய் டிவியின் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் கேப்ரில்லா ஈரமான ரோஜாவே சிசன்2 சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்ரில்லா சீரியலில் அடி எடுத்து வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gabrilla in eeramana rojave serial 2


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->