மரண அப்டேட் கொடுத்த கோட் பட இயக்குநர் - என்னனு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதற்கிடையே இந்தப் படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரித்திருக்கும் நிலையில், இப்படம் தொடர்பான அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். 

அதாவது, தி கோட் படத்தை ஐமேக்ஸ் திரையிலும் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மேலும், உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goat movie relase i max director vengat prabhu info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->