வரும் 5 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக  இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உயிரிழந்ததை அடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது.

இதனை முன்னிட்டு, கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இந்த வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜனவரி 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன் முடிவில் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 47 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலையில், அனைவரும் வாக்களிக்க ஏதுவாக ஈரோடு மாவட்டத்திற்கு அன்றைய தினம் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதன் படி, பிப்ரவரி 5ஆம் தேதி அரசு, தனியார் அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming feb 5 holiday in erode district for by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->