ஈரோட்டில் பெரியாரை பற்றி பேசி வாக்கு கேளுங்க பாப்போம் - திமுகவிற்கு சீமான் சவால்.!
ntk leader seeman challenge to dmk
சமீபத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, இன்று விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசையில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் கலந்து கொண்ட சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு சீமான், 'அத விடுங்க' என பதில் கூறாமல் தவிர்த்தார்.
அதன் பின்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேசிய சீமான், "பெரியார் என பேசும் பெருமக்கள், பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள் பெரியாரை பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று ஒருமுறை பேசி பாருங்கள்.
பெரியாரை சொல்லி வாக்கு வாங்க போகிறீர்களா? காந்தி படத்தைக் காட்டி வாக்கு வாங்க போகிறீர்களா? கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்து வாக்கை பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது" என்று தெரிவித்தார்.
English Summary
ntk leader seeman challenge to dmk