இந்த பைத்தியங்க கிட்ட மாட்டிகிட்டோம் - கோமியம் சர்ச்சை குறித்து சீமான் கருத்து.!
ntk seeman speech about cow urine
மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அதாவது:- "பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.
ஐஐடி இயக்குனர் காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை சில தலைவர்கள் ஆதரித்தும் வருகின்றனர். இந்த நிலையில், இன்று விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் மாட்டுக் கோமியம் சர்ச்சை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "மருத்துவமனைகளில் மாட்டு மூத்திரத்தை லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும்.
இந்த பைத்தியங்களிடம் நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம். மாட்டு பால் குடிக்கிறவன் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் உயர்ந்த சாதி.
இது தான் இந்த நாட்டின் கட்டமைப்பு. உலகத்திலேயே இந்தியாவில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
English Summary
ntk seeman speech about cow urine