ராதிகாவிடம் ஃபேமிலி போட்டோவை காட்டிய கோபி.! மதுபோதையில் உளறிய உண்மை.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் செம விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுவரை 500 எபிசோடுகள்க்கு மேல் விறுவிறுப்பாக ஓடியுள்ளது. தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் நடைபெற்று வருகிறது. 

ராஜமூர்த்தியின் பிறந்தநாளுக்காக இரண்டு குடும்பங்களும் ஒன்றாகக்கூடியுள்ளது. இதில் பாக்கியலட்சுமி தன்னுடைய நெருங்கிய தோழி ராதிகாவை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழைத்து இருக்கிறார்.

ராதிகா தனது மகளுடன் கோபி வீட்டிற்கு வருகின்றார். அவரை கண்ட கோபி திருதிருவென்று மாட்டிக்கொண்டு முழிகின்றார். பிறகு மீட்டிங் என்று கூறி கொண்டே அறைக்குள் சென்று விடுகிறார்.

இதையெல்லாம் அறிந்து கொண்ட மூர்த்தி ராதிகாவிடம் சென்ற நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறவரின் குடும்பம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

ராதிகாவும் மிகுந்த அழுத்தம் கொடுத்து கோபியிடம் கேட்ட நிலையில் அவரை பிரேக்கப் செய்துவிடுகிறார். இதனால், ஆத்திரத்தில் கோபி மது அருந்திவிட்டு ராதிகா வீட்டிற்கு சென்று தற்போது, பாக்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காட்டி உண்மை அனைத்தையும் தானாகவே உளறிக் கொட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gopi opens everything to radhika 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->