"இனிமே என் வாழ்க்கை ராதிகா தான்." பாக்யாவிடமே துணிச்சலாக பேசிய கோபி.?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் 08.30 மணி முதல் 9 மணி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பு செய்யப்படும். 

இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியலில் இருந்து தற்போது செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் விலகியுள்ளார். சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் குமார் நடித்து வருகிறார். 

கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதில் கோபி தனது மனைவிக்கு தெரியாமல் ராதிகாவை கரம் பிடிக்க முயற்சித்து வந்த நிலையில், இவை அனைத்தும் பாக்கியாவுக்கு தெரிய வருகிறது. 

இதனால், அவர் வீட்டை விட்டு பாக்கியா வெளியேறி தனது ஆபிஸில் தங்கி வரும் நிலையில், தற்போது கோபி மீண்டும் பாக்கியா அலுவலகத்திற்கு வந்து அவரை அழைக்கிறார். ஆனால், "உன்னை விட்டு போகமாட்டேன் ராதிகா." என்று பாக்கியாவிடம் அவர் சத்தியம் செய்ய போகிறார். இதை கேட்டு பாக்யாவும், எழிலும் அதிர்ந்து போகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gopi promises To bakyalakshmi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->