நீண்ட நாள் காத்திருப்பின் பலன் - ஜிவி பிரகாஷ் டிவிட்டர் பதிவு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள கலைதுறையினரை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் பாராட்டும் விதமாக ஓவ்வொரு ஆண்டும் விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், 68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2020ம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் , கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு ஜிவிக்கு தேசிய விருது வழங்கப்படும் என எதிர்பார்த்தும் அவை கிடைக்காதது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது  அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை ஜிவி பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு நாள் பெரியதாக ஜெயிப்போம். நீண்ட காத்திருப்பிற்கு பின் அந்த நாள் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார். இந்த பதிவின் கீழே அவரது ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GV Tweet about national awards


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->