ஹெச்.வினோத்- தனுஷ் இணையும் படம் பற்றி அவரே கொடுத்த தகவல்.! - Seithipunal
Seithipunal


சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக நிறைய ரசிகர்களை பெற்றவர் தான் இயக்குனர் எச்.வினோத். இவர் அதன்பின் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி இருந்தார். 

அதன் பின் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற எச்.வினோத் முதன் முதலில் மேற்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். அடுத்தடுத்து வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களையும் வினோத் இயக்கினார்.

சமீபத்தில் வெளியான துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதிகபடியாக சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் எச்.வினோத் ஆக்ஷன் படங்களை தான் இயக்கி இருப்பார்.

அடுத்ததாக தனுஷின் படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சதுரங்கவேட்டை போன்ற ஒரு கதையை தான் தனுஷிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Vinoth about Dhanushs Film 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->