சாக்லெட் பாய் ஹரிஷ் கல்யான்க்கு திருமணம்.. மணப்பெண் பற்றிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது 100 கோடி வானவில், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜயதசமியான இன்று தனது வருங்கால மனைவியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவருடைய பெயர் நர்மதா என்று ஹரிஷ் கல்யாண் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர், "எனது குழந்தை பருவத்தில் இருந்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. 

இப்பொழுது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கிய பயணத்தை துவங்க இருக்கிறேன். இதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் பெற்றோர் மற்றும் உறவினரின் ஆசிர்வாதத்துடன் நர்மதா உதயகுமாருடன் எனது திருமணம் நடக்க இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. எங்களை நாங்கள் புதுப்பித்துக் கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில் உங்களது அன்பும் ஆசீர்வாதமும் வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Harish kalyan marriage with narmatha Udhaykumar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->