ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்' படத்தின் வெளியீட்டுத் தேதி! - Seithipunal
Seithipunal


நடிகர் ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்' திரைப்படம் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டது. 

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் முதல் பருவத்தில் கலந்து கொண்டு பிரபலம் பெற்றவர். இவர் முதன் முதலாக 2018 ஆம் ஆண்டு 'பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். 

இதன் பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான 'எல்ஜிஎம்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்'. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர், பிரார்த்தனா,  இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harish Kalyan Parking movie release date


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->