நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மதுரையைச் சேர்ந்த கதிரேசன் தாக்கல் செய்த வழக்கில் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்றும், அவர் தனக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை எதிர்த்து, நடிகர் தனுஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மேலுார் நீதிமன்றத்திப் இருந்த வழக்கை ரத்து செய்யப்பட்டது. 

இதனையடுத்து, நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக உத்தரவு பெற்றார் என்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கதிரேசன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்து கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High court ordered to send notice to Dhanush


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->