ஜல்லிக்கட்டில் சாதி! திமுக ஆட்சியில் சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவே இல்லையா? ஜெயக்குமார் கடும் கண்டனம்!
DMK MK Stalin Jallikattu palamedu admk jeyakumar
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சாதி-மதம் கடந்து மெரினாவில் இளைஞர்கள் ஒன்றோடு ஒன்றாக நின்று சல்லிக்கட்டை மீட்டனர்!
மதுரை பாலமேட்டில் நடந்த சல்லிக்கட்டில் சாதி அடிப்படையில் மாடுகள் அவிழ்த்திருப்பதும் -மாடுபிடி வீரர்களை அனுமதித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது!
திமுக ஆட்சியில் தொடர்ந்து நடக்கும் சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவே இல்லையா?
இல்லை! இதுவும் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனைகளில் ஒன்றா?
இதை கண்டித்து கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டால் கூட அராஜக அதிகாரத்தை ஆயுதமாக பயன்படுத்தி ஆஃப் செய்வது தான் திமுகவின் தந்திரம்!
திமுக தன் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கும் ஜனநாயக சுதந்திரம்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK MK Stalin Jallikattu palamedu admk jeyakumar