ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  'வீரன்' திரைப்படம் எப்போது ரிலீஸ்.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள  'வீரன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இந்த நிலையில் தற்போது இவர் மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் வீரன் என்னும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். 

இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த ஹிப் ஹாப் தமிழா ஆதியே இசையும் அமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது வீரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hip Hop Aadhi in veeran release on June 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->