கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஆத்திரம்..மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.!
Anger over non-fulfillment of demands Students on hunger strike
கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவ ,மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கல்வியான (Technical Education) நுண்கலைத் துறைப் (Fine Arts) படிப்பான Arts and Crafts படிப்பைக் கலை மற்றும் அறிவியல் (Arts and Science) கல்வியாக மாற்ற, கலைப் பண்பாட்டு துறைச் செயலர் அவர்கள் தன்னிச்சையாக புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய கடிதத்தைத் திரும்ப பெற வேண்டும்.
கடந்த இருபது ஆண்டுகளாக புதுடெல்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) ஏற்புப் (Aporoval) பெற்று நடத்தப்படும் நுண்கலைத் துறைத் (Fine Arts) தொழில்நுட்ப படிப்பான Arts and Crafts படிப்பு AICTE அங்கிகாரத்தை பெற மறுத்தாலோ, அங்கிகாரத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டாலோ அந்த படிப்பை நடத்தக் கூடாது என்றும் அதற்காக வழங்கப்படும் பட்டம் (Degree) செல்லாது என்றும் AICTE கூறியிருக்கும் நிலையில், கல்லூரி நிர்வாகம் தொடந்து நுண்கலைத் துறையின் (Fine Arts) தனித்தன்மையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் கைவிட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப கல்விக்கான நுண்கலைத் துறை (Fine Arts) படிப்பான Arts and Crafts படிப்பு AICTE ஏற்பு (Approval) மற்றும் அனுமதி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையை இணைக்க வேண்டும்.
நுண்கலைப் படிப்பு தொழில்நுட்ப கல்வியில் வராது என்று பொய் ஆவணங்களை கொடுத்து கலைப் பண்பாட்டு துறைச் செயலரை திசை திருப்பிய முன்னாள் முதல்வர் பி.வி.போஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண்கலைத் துறை மற்றும் நிகழ் கலைத்துறை என இரண்டாக பிரிக்க வேண்டும்.
அதிக அளவில் மாணவர்களைக் கொண்ட நுண்கலைத் துறைக்கு தனியாக, முதல்வரை நியமிக்க வேண்டும்.
AICTE அனுமதி இல்லாமல் நடத்தப்படும் ARTS AND CRAFTS நுண் கலைத் துறை முதுகலை (MFA) படிப்பிற்கு AICTE அங்கிகாரம் பெற்ற பின்னரே தேர்வு நடத்தப்படவேண்டும்.
போராட்டத்துன்போது பேச்சுவார்த்தைக்கு வந்த கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநரும், பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதுடன், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றப்படும் என எழுத்துமூலம் உறுதி அளித்தார். ஆனால், இதுநாள்வரையில் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசும், கலைப் பண்பாட்டுத்துறையும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என பாரதியார் பல்கலைக்கூடம்.நுண்கலைத்துறை, மாணவ மாணவியர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Anger over non-fulfillment of demands Students on hunger strike