'தளபதியை பார்த்ததும் பேசவே முடியவில்லை, கண்ணீர் மட்டும் வந்தது'; அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி..!
I couldnt speak when I saw the thalapathy vijay only tears came Aswath Marimuthu resilience
பிரதீப் ரங்கநாதனை வைத்து 'டிராகன்' படத்தினை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன், இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதனை தொடர்ந்து இவர் சிம்புவின் 51-வது படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஆகியோர் இன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
இது குறித்து அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; "பொதுவாக நான் அதிகமாக பேசுவேன். ஆனால் இம்முறை என்னால் பேசவே முடியவில்லை. எனது படக்குழு அனைவரும் நான் எப்போது பேசுவேன் என காத்துகொண்டு இருந்தனர்.
ஆனால், என்னால் தளபதியை பார்த்ததும் பேசவே முடியவில்லை. தளபதி என்னை உற்று பார்த்துக்கொண்டு இருந்தார். கண்ணீர் மட்டும் வந்தது. அனைவருக்கும் ஆச்சரியம், ஏன் அவர் மீது இவ்வளவு அன்பு என்று. என் நண்பர் பிரதீப் ரங்கநாதனை வைத்து படமெடுக்க வந்தேன். ஆனால், அவர் 'அருமையாக திரைக்கதையை எழுதியுள்ளீர்கள் சகோதரரே' என்று சொன்ன பிறகு என் வாழ்க்கை முழுமை அடைந்ததாக உணர்ந்தேன். இது போதும் எனக்கு" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
I couldnt speak when I saw the thalapathy vijay only tears came Aswath Marimuthu resilience