அதற்காக நான் அழுதிருக்கிறேன்! இசையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்! - யுவன் சங்கர் ராஜா! - Seithipunal
Seithipunal


யுவன் சங்கர் ராஜா நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தி கோட்' படத்திற்கு  இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கு கலவையான விமர்சனம் வந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. காதல் கொண்டேன், மன்மதன், மங்காத்தா, பையா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து மிக பிரபலமானார். தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தி கோட்' படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில், சென்னையில் ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில் யுவன் சங்கர் ராஜா கலந்துகொண்டார். அப்போது மாணவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். 

பள்ளியில் நடைபெற்ற விழாவில் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது, ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வியடைந்ததால், இசையமைப்பாளராக நான் தோல்வியடைந்துவிட்டதாக முத்திரை குத்திவிட்டார்கள். அதற்காக நான் அழுதிருக்கிறேன். பிறகு இசையில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதனால்தான் இப்போது உங்கள் முன் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன்.

எதையும் நம் காதில் வாங்கிக்கொள்ள கூடாது. பேசுகிற வாய் பேசிக்கொண்டேதான் இருக்கும். நாம் நடந்து போய் கொண்டே இருக்க வேண்டும். வெறுப்பவர்கள் உங்களை கீழே இழுக்க முயற்சிப்பார்கள். ஆனால், நீங்கள் எப்போதும் தலை நிமிர்ந்து பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்,' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I have cried for it I started paying more attention to music Yuvan Shankar Raja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->