"நான் இப்போது நன்றாக இருக்கிறேன்" விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா பதிவு! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் நடிகர் கார்த்தியின் 'சுல்தான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்தார். 

பின்னர், பல மொழிகளில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படம் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, புஷ்பா 2, சாவா உள்ளிட்ட படங்களில் நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா அதிர்ச்சியான தகவல் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் தனது செயல்பாடு இல்லாததற்கான காரணத்தை வெளிப்படுத்தி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது,

'நான் சமூகவலைதளத்தில் கடந்த மாதம் ஆக்டிவாக இல்லாமல் இருந்தேன். அதற்கு காரணம் ஏனென்றால் எனக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது. பின்னர் அதிலிருந்து குணமடைய மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டில் ஓய்வெடுத்தேன்.

நான் இப்போது நன்றாக இருக்கிறேன். உங்களை கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள். நாளை நமக்கு உண்டா என்று தெரியாது, எனவே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள், என்று நடிகை ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Im fine now actress Rashmika who was involved in an accident recorded


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->