அலங்கு திரைப்படத்தை பாராட்டிய தளபதி; சந்தோசத்தில் சங்கமித்ரா
vijay meets alangu movie team
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ மற்றும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் உள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார்.
KVN Productions தயாரிப்பில் H. வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமான தளபதி 69ல் நடித்து வருகிறார்.
அத்தோட அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் சமீபகாலமாக நடைபெறும் மற்ற திரைப்படங்களின் ப்ரோமோஷன்களுக்கு தளபதி விஜய் உதவி வருகிறார்.
அந்தவகையில்,மார்க் ஆண்டனி, ஹிட் லிஸ்ட் போன்ற படத்தின் குழுவினர்கள், விஜய்யை நேரில் சந்தித்து, படத்தை ப்ரோமோஷன் செய்தனர்.
மேலும், பிரஷாந்தின் அந்தகன் படத்திலிருந்து ஒரு பாடலையும் விஜய் வெளியிட்டு இருந்தார்.
தற்போது, விரைவில் அலங்கு படக்குழுவினரும் விஜய்யை அவருடைய வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளனர். அரசியல்வாதி அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா தயாரித்துள்ள படம் தான் அலங்கு.
முதலில் இப்படத்திற்கான ப்ரோமோஷனுக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை படக்குழுவினர் சந்தித்து இருந்தனர். தற்போது தளபதி விஜய்யை படக்குழுவினர் சந்தித்துள்ளனர். அலங்கு படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு, படக்குழுவினரை விஜய் அவர்கள் பாராட்டியுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது..
English Summary
vijay meets alangu movie team