விபத்தில் தலையில் அடிபட்டு தெருவில் கிடந்த கார்த்தி; சூர்யாவின் நெகிழ்ச்சி சம்பவம்;உண்மையை கூறிய பாடகர்..! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவை தாண்டி, பலருக்கு  பல உதவிகளை செய்து வருகின்றனர். 

அப்படி சில விஷயங்கள் வெளியே தெரிந்தாலும்,, பல விஷயங்கள் தெரியாமல் இருக்கிறது.
 
இதுவரை  சூர்யா செய்த நல்ல விஷயம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.. இதனை பிரபல பின்னணி பாடகர் க்ரிஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது "சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நானும் சூர்யா அண்ணனும் ஒரே காரில் சென்றோம், அப்போது தெருவில் ஒருவர் விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் அடிபட்டு கிடந்தார். அவரை சுற்றி மக்கள் பலர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.. ஆனால் யாரும் உதவவில்லை. 

உடனடியாக காரில் இருந்து இறங்கியா சூர்யா, அடிபட்டு கிடந்தவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்கு சென்றார்.அதனால்  அவரை காப்பாற்ற முடிந்தது. நான் இப்படியொரு உதவியை செய்திருக்க மாட்டேன், யோசிப்பேன். ஆனால், சூர்யா அண்ணா செய்தார். எப்படி அண்ணா என்று அவரிடம் நான் கேட்டேன்". என்று க்ரிஷ் கூறியுள்ளார்.

அதற்கு சூர்யா அண்ணா அளித்த பதில் "அப்படி நினைத்திருந்தால் என் தம்பி இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டான்" என்றார்.

அதாவது  சூர்யாவின் அண்ணாவின் தம்பி நடிகர் கார்த்தி, கல்லூரியில் படித்த வந்தபோது, அவருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் நடிகர் கார்த்தியின் தலையில் அடிபட்டு தெருவில் கிடந்துள்ளார். 

அப்போது ஒருவர், இந்த பையனை பார்க்க சிவகுமார் மகன் போல் உள்ளதே, என உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து, உயிரை காப்பாற்றியுள்ளார். அதனால் தான் இன்று கார்த்தி உயிருடன் இருக்கிறார்" என சூர்யா கூறியதாக பாடகர் க்ரிஷ் கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Karthi met with accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->