அவர் என்ன சூப்பர் ஸ்டாரா..? அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு..!
annamalai supports actor allu arjun
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொள்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது,
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன்.
அவர் அங்கு, சூப்பர் ஸ்டார் ஆவதற்காக போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். நடிகர் அல்லு அர்ஜுனை விட பெரிய சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று செயல்படுகிறார்.
அத்துடன், அவர் தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொள்கிறார். அவரும் சினிமாவுக்கு சென்று நடித்து நிரூபித்தால் சண்டை போடலாம். ஆனால், அவர் அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.
அல்லு அர்ஜுன் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பிறகும், அவரை துன்புறுத்துவது மற்றும் சட்டப்பேரவையில் அவரது பெயரை குறிப்பிட்டு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
தியேட்டருக்கு வந்தால் யாராவது உயிரிழப்பார்கள் என்று அல்லு அர்ஜுனுக்கு தெரியுமா? சட்டம் அனைவருக்கும் சமம் தான். ஆனால், ரேவந்த் ரெட்டி பேசியதில் நடுநிலைமை இல்லை" என்றும் கூறியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியான போது மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதன் போது ,கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவடைந்துளார்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுன், தியேட்டர் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், புஷ்பா 2 திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2 நாட்களுக்கு முன்பே இந்த திரைப்படம் ரூ.1000 கோடியை தாண்டி வசூலித்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
annamalai supports actor allu arjun