எனது மகன் சோரோ இறந்துவிட்டார் - நடிகை திரிஷா போட்ட டிவிட்!
Trisha dog death news
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகையான திரிஷா தான் ஆசையாக வளர்த்து வந்த நாய் (சோரோ - Zorro)) இறந்தது குறித்து ஒரு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் மகன் சோரோ (Zorro) இன்று காலை, இந்த கிறிஸ்துநமஸ் நாளில் காலமானார்.
என்னை நன்கு அறிந்தவர்கள், இனி என் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
என் குடும்பமும் நானும் உடைந்துவிட்டோம். நாங்கள் அதிர்ச்சியிலுள்ளோம். எனது பணிகளை ஒரு சில நாட்களுக்கு விலக்கி, சில காலம் அனைவரிடமும் தொடர்பில் இருக்காமல் இருக்கிறேன். நன்றி" என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.