ரூ.100 கோடி வசூல் பெற்றதா இந்தியன் 2 ?. - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இந்தப்படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர் மறையான விளைவுகளை சந்தித்து வருகிறது. 

இதனால், இப்படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால், வாய்ப்பில்லை. காரணம், இந்தப்படம் உலகளவில் முதல் நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில், இந்தியன் 2 படம் தற்போது ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian 2 movie collect hundrad crores


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->