புதிய அப்டேட்டுடன் புத்தாண்டு வாழ்த்து - வைரலாகும் இந்தியன் 2 பட போஸ்டர்.!
indian 2 movie release date announce
தமிழில் 1996 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் இந்தியன் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
ஆனால், கொரோனா பெருந்தொற்று மற்றும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் கமல்ஹாசன் சமுத்திரக்கனி சித்தார்த் காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் ராகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
இந்த நிலையில், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்தத் திரைப்படத்தின் புதிய போஸ்டரை லைக்கா நிறுவனம் தனது X தளத்தில் வெளியிட்டது. இந்தப் போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலாகியுள்ளது.
English Summary
indian 2 movie release date announce